என்னதான் அழகாக இருந்தாலும் முகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கருமை மற்றும் பருக்கள் முகத்தின் வசிகரம் மற்றும் அழகை கெடுப்பதாக இருக்கும். தீடிரென வெளியே முக்கியமான இடங்களுக்கு செல்லும் போது வீட்டில் செய்யக்கூடிய அழகு குறிப்புகள் பயன்படாமல் போகும். உடனடியாக முகத்தில் இருக்கும் கருவளையம், சமமற்ற தோலின் நிறம், முகப்பருக்கள் ஆகியவற்றை எப்படி தான் மறைப்பது//
அதற்காக தான் இருக்கிறது கண்சீலர். இதனை பயன்படுத்தி முகத்தை அழகாக மாற்றலாம். இந்த கண்சீலரை எப்படி எல்லாம் உபயோகிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முதலில் பவுண்டேஷன்
நீங்கள் எடுத்தவுடன் கண்சீலரை முகத்தில் தடவக்கூடாது. முதலில் பவுண்டேசனை தான் முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கண்சீலரை தடவுங்கள். இது முகத்தில் மேக்கப் கலைவதை தடுக்கும்.
2. கண்களுக்கு..
கண்சீலர் கண்களுக்கு அடியில் இருக்கும் கருவளையத்தை நீக்கும். இதனை முக்கோண வடிவத்தில் தடவ வேண்டும். பிறை நிலவு வடிவத்தில் தடவக் கூடாது. இவ்வாறு தடவுவதன் மூலம் கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை மறைக்கலாம்.
3. ஐ சேடோ நீண்ட நேரம் நிலைக்க
ஐ சேடோ நீண்ட நேரம் நிலைத்திருக்க முதலில் கண்சீலரை தடவி விட்டு பின்னர் ஐ சேடோவை தடவலாம். ஐ சேடோ பிரைமர் வாங்கி பணத்தை செலவழிக்க விரும்பாதவர்களுக்கு இது உதவும்.
4. உதடுகளுக்கு
உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும் முன்னர் கண்சீலர் போடுவதால் லிப்ஸ்டிக்கின் உண்மையான நிறத்தை பெற முடியும். இது உதடுகளின் நிறத்தை எடுத்துக்காட்டும்.
5. முகப்பருக்கள்
முகப்பருக்கள் முகத்தின் அழகை கெடுக்கும். இவற்றை கண்சீலரை கொண்டு மறைக்கலாம். இதற்கு பச்சை நிற கண்சீலரை தடவி பின்னர் உங்கள் முகத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு உள்ள கண்சீலரை தடவ வேண்டும்.
Comments
Post a Comment