எ‌ளிய அழகு‌க் குற‌ி‌ப்பு‌க‌ள்

துளசி வேப்பிலை இரண்டையும் அரைத்து அத்துடன் சந்தனப் பவுடரைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

1 தேக்கரண்டி முட்டைகோஸ் சாறு, 1 தேக்கரண்டி ஈஸ்ட், ஒரு தாக்கரண்டி தேன் இந்த மூன்றையும் கலந்து முகம் மற்றும் காது பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் தோல் வற‌ட்‌சி நீங்கும்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழம் சிறிது எலுமிச்சைப்பழ சாறு சேர்த்து முகத்தில் தடவிக் கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும். '

தேன் 1 தேக்கரண்டி, ஆரஞ்சுசாறு 1 தேக்கரண்டி. ரோஸ்வாட்டர் 1 தேக்கரண்டி, முல்தாணிமட்டித் தூள் சிறிதளவு சேர்த்து கலந்து முகத்தில் தடவி காய்ந்தபின் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பொலிவு பெறும்.

எலுமிச்சைச்சாறு தேன் இரண்டையும் கலந்து முக‌த்‌தி‌ல் போடலாம். இதனால் கரும்புள்ளிகள் நீங்கும்.

தர்பூசணிப் பழ சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும்.

Comments