பண்டிகை காலங்கள் நெருங்கி விட்டன. நம்மை அழகாக பராமரித்து கொள்ள தேவையான அழகு சாதனங்களை வாங்க கடைகளுக்கு செல்வோம் .
வாங்கும்போது அதன் மூல பொருட்கள் என்ன உள்ளது என்பதை அறிந்து கொண்டு வாங்குவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இதனால் அந்த அழகு சாதனத்தை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கும்.
அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சில மூல பொருள்களின் ஒவ்வாமை நமக்கு இருக்கும்போது, அதனை வாங்காமல் இருப்பது நல்லது. அழகு சாதனத்தில் பயன்படுத்தும் மூல பொருட்களை பற்றிய தகவல் தான் இந்த தொகுப்பு. படித்து பயனடையுங்கள்.
சருமத்தை சேர்த்து பிடிப்பதற்காக செல்கள் உற்பத்தி செய்யும் புரதம் தான் இந்த கொலாஜென். சருமம் இளமையாக இருக்க இது உதவுகிறது. சருமத்திற்கு ஸ்திரத்தன்மையும் , விரி திறனும் கொடுக்கிறது. சிறிய வயதில் நமது சருமம் கொழுகொழுப்பாக மற்றும் மென்மையாக இருப்பதற்கு காரணம். கொலாஜென் உற்பத்தியால் சருமம் தன்னைத்தானே அடிக்கடி புதுப்பித்து கொள்வதுதான்.
வயது அதிகமாகும்போது இந்த கொலாஜென் உற்பத்தி குறைகிறது , உடலில் இருக்கும் கொலோஜன்கள், சூரிய ஒளியின் தாக்கத்தால் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் சேதமடைந்துவிடுகின்றன. இதனால் உடலில் சுருக்கமும், வயது மூப்பும் ஏற்படுகிறது. கொலாஜென் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள், சருமத்தை மென்மையாக மாற்றி சுருக்கங்களையும் வயது மூப்பையும் தடுக்கின்றன.
கொலாஜென் போல ஒரு முக்கியமான புரதம் தான் இந்த எலாஸ்டின் . இந்த வகை புரதம் உடலில் மீள்திசுக்களில் காணப்படுகின்றன. உடல் விரிக்கப்படும் போது , மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு இது பொறுப்பேற்கிறது. பருவ வயதிலும், வாலிப வயதிலும் எலாஸ்டின் அளவு அதிகமாக இருக்கும். அதன்பிறகு குறைய தொடங்கும். எலாஸ்டின் உள்ள பொருட்கள், சருமத்திற்கு இயற்கையான ஸ்திரத்தன்மையை கொடுக்கும்
ஹையலூரோனிக் அமிலம் கொலாஜென் உடலில் குறையும் போது, சுருக்கங்கள் தோன்றுவதும், சருமம் நிறமிழப்பதும் தொடங்கும். இது நேரும்போது உடலின் கொலாஜென் அளவை அதிகரிப்பது சருமத்தை சீராக்கும் . இந்த கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது இந்த அமிலம்.

Comments
Post a Comment