நம்மில் பெரும்பாலோனர் அழகிற்காக கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தி வருகிறோம்... அமெரிக்கர்கள் வெள்ளையான சரும நிறமும், இந்தியர்கள் மாநிறமான சருமத்தையும், ஆப்ரிக்கர்கள் கருப்பான சருமத்தையும் பெற்றிருப்பது இயல்பான ஒரு விஷயம் தான்.. ஆனால் நமது நிறம் ஒரு குறை என்று சுட்டிக்காட்டி பல வணிக நிறுவனங்கள் தங்களது தொழிலை செழிப்படைய செய்கின்றன...
நீங்களே சில விளம்பரங்கள் நம்மை கவரும் விதமாக இந்த க்ரீமை 4 வாரங்கள் பயன்படுத்தினால், மனதை மயக்கும் சிகப்பழகை பெறலாம் என்று நம்மை மயங்க செய்கின்றன.. ஆனால் இது எல்லாம் உண்மை தானா? நீங்களே இது போன்ற க்ரீம்களை பயன்படுத்தியிருந்தால் உங்களுக்கே உண்மை என்னவென்று தெரிந்திருக்கும்... இந்த பகுதியில் அழகு க்ரீம்களை பயன்படுத்தி சிகப்பழகை பெற முடியுமா என்பது பற்றி காணலாம்.
உண்மையில் இது போன்ற க்ரீம்களை முகத்தை சிகப்பழகாக்கும் மூலப்பொருட்கள் மிக குறைந்த அளவு மட்டுமே இருக்கும். மேலும் இதில் தீங்கு விளைவிக்க கூடிய மெர்குரி, ஸ்டேராய்டுகள், பாரபென்ஸ், பிரிசர்வெட்டிவ்ஸ் மற்றும் வாசனை பொருட்கள் அடங்கியுள்ளன. இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

சிகப்பழகு சருமம்
நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையிலேயே ஒரு சிலரை சந்தித்திருக்கலாம்.. கருப்பாக இருந்த ஒரு சிலர் நம்ப முடியாத அளவிற்கு நல்ல கலராக மாறியிருப்பார்கள்.. இவர்களை பார்ந்தால், நாமும் ஏன் இது போன்ற க்ரீம்களை பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் உங்களது மனதில் உதிக்கும்... ஆனால் இவ்வளவு சீக்கிரமாக ஒருவரை கலராக மாற்றும் இந்த க்ரீமில் எந்த அளவிற்கு ஆபத்துக்கள் இருக்கும் என்று என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறீர்களா?சரும நிறத்தை அதிகரிக்க முடியுமா?
சரும மருத்துவர்களின் கருத்துக்களின் படி உங்களது இயற்கையான நிறத்திலிருந்து 20% அளவு மட்டும் உங்களது நிறத்தை மேம்படுத்த முடியும் என்கிறார்கள்.நிறத்தை பாதுகாப்பாது எப்படி?
உங்களது சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. உங்களது சருமத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாலே நீங்கள் அழகாக தான் இருப்பீர்கள்.. சூரியனிடம் இருந்து வரும் கதிர்கள் உங்களை பாதிக்காமலும், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி வந்தாலுமே உங்களது சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.மருத்துவர் பரிந்துரை
உங்களது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் ஏதோ க்ரீமை போட்டு தன் நிறத்தை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பதற்காக நீங்களும் அதே க்ரீமை வாங்கி பயன்படுத்தலாம் என்று பயன்படுத்தாதீர்கள்... மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தான் இது போன்ற ஃபேர்நஸ் க்ரீம்களை வாங்க வேண்டும்.உஷார்!
மூன்றே வாரத்தில் சிகப்பழகை பெறலாம்.. நாங்கே வாரத்தில் சிகப்பழகை பெறலாம் என்று, கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி உங்களது சரும ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உங்களது உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடாதீர்கள்...
உண்மையில் இது போன்ற க்ரீம்களை முகத்தை சிகப்பழகாக்கும் மூலப்பொருட்கள் மிக குறைந்த அளவு மட்டுமே இருக்கும். மேலும் இதில் தீங்கு விளைவிக்க கூடிய மெர்குரி, ஸ்டேராய்டுகள், பாரபென்ஸ், பிரிசர்வெட்டிவ்ஸ் மற்றும் வாசனை பொருட்கள் அடங்கியுள்ளன. இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

Comments
Post a Comment