ஒரே ஸ்பூன் தயிரும் இந்த பொடியும் கலந்து முகத்துல தேய்ங்க... அப்புறம் உங்க ஊர்லயே நீங்கதான் பேரழகு...
'நிலவு போன்ற அழகிய முகம்' என்று பள்ளியில் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்போம். ஆனால், பலருக்கு முகமே பெரிய பிரச்னையாக இருக்கிறது. முகம் வறண்டு, சருமத்தில் சிறு வெடிப்புகள் ஏற்பட்டு வலியையும் கொடுக்கும். அதிக குளிர், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சுற்றுச்சூழல் மாசு, புகை பிடிக்கும் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அளவுக்கு அதிகமான மேக்கப் என அநேக காரணங்கள் முகத்தின் தோல் வறண்டு போகவும், வெடிப்புகள் தோன்றவும் வழி வகுக்கின்றன.
சிலருக்கு இன்னும் ஒரு படி மேலே போய் வெடிப்புகளின் வழியாக இரத்தம் கசிவதும் உண்டு. சரியான பராமரிப்பின் மூலமாக இவை அனைத்தையுமே தவிர்க்க முடியும்; முகத்தை பார்த்தாலே சீதேவியை பார்த்ததுபோன்ற திருப்தியை பார்ப்பவர்களுக்கு உருவாக்க முடியும்.
சூப்பர் மார்க்கெட்களில், ஆன்லைனில் வேதிப்பொருள்கள் அடங்கிய கண்ட கண்ட ஃபேஸ்பேக்குகளை வாங்கி பணத்தை செலவழிப்பதோடு, முகத்தின் அழகையும் கெடுத்துக்கொள்ளாமல், வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையான சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக முக அழகினை பேண முடியும்.
சந்தனம்
சந்தன சோப், சந்தன வாசனை திரவியம், சந்தன பத்தி என்று அநேக பொருட்களை பார்க்கிறோம்; உபயோகிக்கிறோம். சந்தனம் வாசனையுள்ளது; பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியது. முகத்தின் வறட்சியை மாற்றி குளுமை அளிக்கக்கூடியது சந்தனம். முகத்தில் ஏற்படக்கூடிய சிறுகட்டிகள் போன்றவற்றை குணமாக்கி, முகத்திற்கு நல்ல பொலிவையும் சந்தனம் கொடுக்கும்.
முகத்தின் சருமத்திற்கு தேவையான நல்ல ஊட்டத்தை கொடுக்கக்கூடிய நலம் பயக்கும் பாக்டீரியாக்கள் தயிரில் உள்ளன. தயிரில் காணப்படும் புரோட்டீன், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துகள் உங்கள் நிறத்தை மேம்படுத்தும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதோடு, தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கும்.
நன்மை பயக்கும் சந்தனத்தையும், தயிரையும் தேனுடன் கலந்து வறண்டு வெளிறிப்போன முகத்தின் மீது தடவி வர, முகம் பொலிவானதாக மாறும்.
சிலருக்கு இன்னும் ஒரு படி மேலே போய் வெடிப்புகளின் வழியாக இரத்தம் கசிவதும் உண்டு. சரியான பராமரிப்பின் மூலமாக இவை அனைத்தையுமே தவிர்க்க முடியும்; முகத்தை பார்த்தாலே சீதேவியை பார்த்ததுபோன்ற திருப்தியை பார்ப்பவர்களுக்கு உருவாக்க முடியும்.
சரும பராமரிப்பு
முகத்தில் அரிப்பு ஏற்பட்டால் தோல் வறண்டு போய்விட்டது என்று அறிந்து கொள்ளலாம். அரிக்கிறது என்று சொறிந்து கொண்டே இருந்தால் முகத்தின் தோல் தடிமனாவதுடன் நிறமும் கறுத்து விடும். மாய்ஸ்சர்ஸ் என்னும் முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் பூச்சுகள் மட்டும் முகத்தை பராமரிக்க போதுமானவை அல்ல. மிருதுவானதாக, மிளிரக்கூடியதாக உங்கள் முகத்தை பராமரிக்க நீங்கள் சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.சூப்பர் மார்க்கெட்களில், ஆன்லைனில் வேதிப்பொருள்கள் அடங்கிய கண்ட கண்ட ஃபேஸ்பேக்குகளை வாங்கி பணத்தை செலவழிப்பதோடு, முகத்தின் அழகையும் கெடுத்துக்கொள்ளாமல், வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையான சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக முக அழகினை பேண முடியும்.
சந்தனம்
சந்தன சோப், சந்தன வாசனை திரவியம், சந்தன பத்தி என்று அநேக பொருட்களை பார்க்கிறோம்; உபயோகிக்கிறோம். சந்தனம் வாசனையுள்ளது; பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியது. முகத்தின் வறட்சியை மாற்றி குளுமை அளிக்கக்கூடியது சந்தனம். முகத்தில் ஏற்படக்கூடிய சிறுகட்டிகள் போன்றவற்றை குணமாக்கி, முகத்திற்கு நல்ல பொலிவையும் சந்தனம் கொடுக்கும்.
முகத்தின் சருமத்திற்கு தேவையான நல்ல ஊட்டத்தை கொடுக்கக்கூடிய நலம் பயக்கும் பாக்டீரியாக்கள் தயிரில் உள்ளன. தயிரில் காணப்படும் புரோட்டீன், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துகள் உங்கள் நிறத்தை மேம்படுத்தும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதோடு, தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கும்.
நன்மை பயக்கும் சந்தனத்தையும், தயிரையும் தேனுடன் கலந்து வறண்டு வெளிறிப்போன முகத்தின் மீது தடவி வர, முகம் பொலிவானதாக மாறும்.

Comments
Post a Comment